health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

சமயம், சமூகம் தாண்டி சொந்த வீட்டிலும் பெண்ணுக்கான சம உரிமை சொல் அளவில் மட்டுமே!

என்னுடைய தங்கை, பெரியம்மா மகள் இருவரும் நெருங்கிய தோழிகள். எப்பொழுதும் சேர்ந்தே உலா வருவர். இருவரின் இணக்கத்தையும் பார்த்து "ரெண்டு பேருக்கும் ஒருத்தனையே கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதன் " என்று வேடிக்கையாக என் அம்மா கூறக் கேட்டிருக்கிறேன். யோசித்துப் பாருங்கள். நானும் என் அண்ணனும் நெருக்கமாக இருந்தால், இருவருக்கும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து வைக்கலாம் என்று விளையாட்டாகக் கூட என் அண்ணையால்  கூற முடியுமா ? எவ்வளவு அபத்தமாகத் தோன்றுகிறது ? தவறான ஒரு விடயத்தை நடைமுறை படுத்தி அதை பாதிப்பு அடைந்த பெண்களையே ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது இந்த சமூகம். படித்த பெண்களே இதை அறியாமல் இருப்பது   வேதனை அளிக்கிறது.மதம், கலாச்சாரம், அரசியல் என்று எல்லா இடங்களிலும் பெண்கள் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர்.
சற்று கூர்ந்து கவனியுங்கள். கோவில்களில் ஆண் தெய்வங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உள்ளனர். ஆனால் பெண் தெய்வங்களுக்கு அந்தச் சலுகை இல்லை. சில மதங்களிலோ பெண்ணுக்கு தெய்வமாகும் சலுகையே இல்லை. இதை பார்த்து வளரும் நாம் நம்மை அறியாமல் இந்த நடைமுறைக்கு பழகிவிடுகிறோம்.  கலாசாரமாக மாறிவிட்ட பழக்கங்களை மாற்றி கொள்ள மனம் மறுக்கிறது.
ஒரு ஆண் மகன் நடத்தையை பற்றி என்றுமே கண்டு கொள்ளாத சமுதாயம் பெண்ணுக்கு கற்பிலக்கனம் வகுப்பதில் தவறுவதே இல்லை
Image courtesy: Reuters/Ajay Verma
விவாகரத்திற்கு பின்னும் திருமணம் ஆகாத பெண்ணை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆண்களுக்கு உள்ளது ஆனால் பல பெண்களுக்கு   மறுமணம் என்பது இன்றளவும் கனவாகவே உள்ளது.
பெண் விடுதலைக்காகப் பாடுபடுகிறோம் என்று கூறும் தி.க.வின்  வழியில் வந்த மூத்த தலைவர் கூட மூன்று மனைவியருடன் இருப்பதை ஏற்றுக்கொண்ட நாம் எந்த ஒரு பெண் அரசியல்வாதியாவது ஒன்றுக்கு மேற்பட்ட துணையைக்கொண்டு வெளிப்படையாக வாழ்ந்தால் ஆதரிப்போமா ?
ஆண் குழந்தையை வாரிசாகவும் பெண் குழந்தையை பாரமாகா பார்க்கும் பரிதாப நிலையில் தான் நாம் இன்றளவும் உள்ளோம்.

சமயம், சமூகம் தாண்டி சொந்த வீட்டிலும் பெண்ணுக்கான சம உரிமை சொல் அளவில் மட்டுமே! செயல் அளவில் இல்லை!!
திலீபன் துரை
Dhiliban Durai is a Doctor and a contributing writer to The Lantern.

9 comments: