health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

காடோடி - நூல் விமர்சனம் - மீள்பார்வை

புத்தகம்: காடோடி
வகை: புதினம்
ஆசிரியர்: நக்கீரன்
பதிப்பகம்அடையாளம் பதிப்பகம்

ஆசிரியர் குறிப்பு:
நவீன கவிஞர், கட்டுரையாளர், குழந்தை இலக்கியவாதி,சூழலியலாளர்,களப்பணியாளர்,பேச்சாளர் எனப் பண்முகம் கொண்ட நக்கீரன் அவர்களின் நாவல் வடிவில் முதல் புத்தகம்.தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்,என் பெயர் ஜிப்சி,மழைக்காடுகளின் மரணம்,திருடப்பட்ட தேசம்,கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் ஆகியன இவரது பிற நூல்கள்.தமிழ் பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்துக்கள் தனித்தன்மை கொண்டது.மனைவி மகளுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசித்துவருகிறார்.
நூல் மீள்பார்வை:
மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் துவான்,அங்கு சந்திக்கும் மனிதர்கள்,ஆசையாய்ப் பார்க்க நினைக்கும் ஆதி விலங்குகள் என ஒவ்வொரு அனுபவமாய் கதை நகர்கிறது.அங்கு இருக்கும் பழங்குடிகளின் வாழ்க்கை முறை,வெவ்வேறு உயிரினங்களின் பெயர்கள் என தெளிவாய்க் குறிப்பிட்டு,கதையோடு நம்மையும் இழுத்துச் செல்கிறது..இறுதியாக காட்டை அழித்துவிட்டு எந்த நிலையில் அவன் வெளியே வருகிறான் என்பதே காடோடி.
நூல் விமர்சனம்:
புவி வெப்பமயமாதல், ஓசோனில் ஓட்டை என்று, இன்று நாம் சந்தித்தித்துக் கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆதி மூலமாய் இருப்பது மரங்களை நாம் அழித்ததால் தான்.இங்கு இருக்கும் அனைவரும் ஒரு சேர ஒத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை.வெறும் பணத்திற்காக பல லட்சக்கணக்கான மரங்கள் ஒன்று சேர அழிக்கப்பட்டன.அரசாங்கத்தின் அனுமதியுடனே அவை அனைத்தின் அரங்கேற்றமும் நடந்து முடிந்துவிட்டது.காடுகளை அழிக்கத் துவங்கிய காலகட்டத்தில் அந்தச் செயலில் ஒரு பங்காய் இருக்கும் ஒருவனை மையமாகக் கொண்டே கதை நகர்கிறது.
ஒரு நாவலுக்குரிய அனைத்து அம்சங்களையும் ஏற்று,வாசகனை சிரிக்க,அழுக,வெட்கப்பட,சிந்திக்க,அறுவறுப்படைய என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டித் தீர்க்க வைக்கிறது
.புத்தகத்தைப் படிக்கும் போதே அந்தக் காட்டினுள் சென்று அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் ஒர் உணர்வு.அந்த மக்களின் கலாச்சாரம்,மொழிநடை,வனவிலங்குகளின் சித்தரிப்பு என ஒவ்வொன்றிலும் எழுத்தாளரின் உழைப்பு தெரிகிறது.கதாநாயகனுடன் வரும் உப கதாப்பாத்திரங்களும் மனதில் பதிந்துவிடும் அளவிற்கு அழுத்தமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.புத்தகத்தை மூடும் போது நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டு கூனிக்குறுகி இருப்போம் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.சுற்றுச்சூழல் மீதும்,இயற்கையின் மீதும்,மரங்களின் மீதும்,மண்ணின் மீதும் ஏன் இலக்கியத்தின் மீதும் காதல் கொண்டவராய் இருந்தால் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் காடோடி.

தி லேண்டர்ன் 

1 comment:

  1. Very much moved when I happen to know about this book n the noble message of NATURE LOVING N PROTECTING theme .hope by next week I will get this book n enjoy the heavenly share of nature's manna. Very nice and brief review .thank you .jo

    ReplyDelete