நியூசிலாந்து வெல்லிங்டனில் உள்ள “தே பாபா” (Te Papa) தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது உடைந்த நிலையில் காணப்படும் இந்த வெண்கல தமிழ் மணி.
மணி கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு:
மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த மணி எங்கு கிடைத்ததென்று சேலேன்சோவிடம் கேட்டதற்கு, அது புயலால் சாய்ந்த ஒரு மரத்தின் வேருக்கு அடியில் சிக்கியதாக கூறி இருக்கிறார். மேலும் அதுபல தலை முறைகளாக அங்குள்ள iwi பழங்குடியின மக்களுக்கு சொந்தமானது என நம்பப்பட்டது. பின்னர் சேலேன்சோ அந்த மணியை ஒரு இரும்பு பானைக்கு பண்டமாற்று முறையில் வாங்கினார். அவரது மரணத்திற்கு பின் அந்த மணி அருங்காட்சியகதிற்கு வழங்கப்பட்டது, அது காட்சியின் போது பொதுமக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியது.
மணியின் புகைப்படம் மற்றும் பிரதிகள் இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. தமிழர்கள் அதை அடையாளம் கண்டு கொண்டனர். அது ஒருவகை கப்பலில் உபயோகப்படுத்தப்படும் மணி என்று தெரியவந்தது. கடல் பயணத்தின் பொது பயன்படுத்தப்படும் ஓருவகை மணி அது . எல்லாவற்றுக்கும் மேலாக அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் என்றும் தெரியவந்தது. அவ்வெழுத்துக்கள் தற்கால எழுத்துக்களிலிருந்து வேறுபட்டுள்ளது (தொன்மையான தமிழ் எழுத்துக்கள்) எனவே அது, ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும் அறியப்பட்டுள்ளது அதாவது 1450ஆம் ஆண்டு வாக்கில் இது செய்யப்பட்டு இருக்கலாம்.
இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழக கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது என்று தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மணியின் விவரம்:
இந்த மணி 13 செ.மீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில் “முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி” எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த எழுத்துக்கள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மேலும் நீங்கள் மணியின் வரைபடத்தை காணலாம்.
தமிழ் மணி நியூசிலாந்திற்கு எப்படி வந்தது என்ற உறுதியான வரலாறு இன்றளவும் காணாத மர்மமாக உள்ளது.
எது எப்படி இருந்தாலும், தமிழராகிய நாம் அனைவரும் நிச்சயம் பெருமை பட வேண்டிய விஷயம் தான் இது. நம் முன்னோர்களின் கடல் கடந்த வணிகத்தையும், அவர்களின் கடல் சார் அறிவையும் தான் இந்த கண்டுபிடிப்பு நிறுவுகிறது.
இந்த மணி குறித்து அறிஞர் ஆ.தி. ஆறுமுகம் தமது நூலான Tamil Imprints in New Zealand இல் தெளிவாக எழுதியுள்ளார்.
உசாத்துணை மற்றும் நான் மேல எழுதிய அனைத்திற்கும் ஆதாரங்கள் இதில்:
https://teara.govt.nz/en/photograph/1135/the-tamil-bell
சிவ சங்கர் பாண்டியன்
சிவ சங்கர் பாண்டியன்
No comments: