health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது சிலைகள் மட்டும் அல்ல - நம் பகுத்தறிவும் தான்!

நீண்ட நாட்களாக எழுத நினைத்த பதிவு. வாழ்வில் பல காட்சிகளை பார்க்கிறோம் சில  காட்சிகள் நம் மனதில் இன்பத்தை தருகிறது, சில காட்சிகள் துன்பத்தை தருகிறது, வேறு சில காட்சிகள் நம் மனதில் கேள்வியை தருகிறது அப்படி என் மனதில் கேள்வி எழ செய்த காட்சியை உங்கள் கண் முன் வைத்து விட்டு மேலும் எழுத விழைகிறேன்.
Source: BBC
பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அண்ணல் அம்பேத்கரின் சிலை இரும்பு அரண் கொண்டு பாதுகாக்கப்பட்டிருப்பதை கண்டேன் . தலைவர்களின் சிலைகளுக்கு மண்டபங்கள் கட்டும் வழக்கம் இருக்கும் போதிலும் இப்படி இரும்பு கம்பிகள் வைப்பது வினோதமாக தோன்றியது . சட்டென சிந்தனை வேறொன்றை யோசிக்க இதனை மறந்து விட்டேன் . மீண்டும் இதே போன்ற அம்பேத்கர் சிலைகள் கண்ணில் பட சற்று கூர்ந்து கவனிக்க தொடங்கினேன் . ஒரு முறை பசும்பொன் முத்துராமலிங்கனாரின் சிலைக்கும் இதே போல் அரண் அமைக்கப் பட்டத்தை பார்த்ததும் இவை இரண்டிலும் உள்ள வன்மம் புரிந்தது. 
Source: DNA India
அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்தவர். சட்ட மேதை. பசும்பொன் முத்துராமலிங்கம் விடுதலை போராட்ட வீரர். சிறந்த ஆன்மீகவாதி. இவர்கள் இருவரையும் வெறும் சாதிய அடையாளங்களாக பாவித்து அவர்கள் சிலையை சேதப்படுத்துவது ஒரு சமுதாயமாக நாம் எவ்வளவு கீழ் நிலையில் உள்ளோம் என்பதை பறைசாற்றுகிறது . உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த உலகத்தில் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை . இப்படி பட்ட பிற்போக்கு சிந்தனை  உள்ள மனிதர்களை கொண்ட சமூகத்தில் நாமும் ஒருவர் என்பதை எண்ணி வெட்கப்பட வேண்டி இருக்கிறது . 
உலகத்தில் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் தன்னை தலை சிறந்ததாக கூறி கொள்ளும் நமது நாடு தன்னில் உள்ள சாதிய பாகுபாட்டை கலையாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது  . பல          நூற்றாண்டுகளாக உள்ள இந்த வழக்கம் நமது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிக பெரிய முட்டுக்கட்டையாக உள்ளதை நாம் உணர மறுக்கிறோம் . பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதனை நமக்கு கற்பிக்காத கலாச்சாரத்தையும் கல்வியையும் கேள்வி கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
Source: Scroll.in
மனிதர்களுக்கு இடையே இருக்கும் மரபியல் மூலக்கூறு ( DNA ) 99% ஒரே மாதிரி இருப்பதாகவும் மீதம் இருக்கும் ஒன்றுக்கு குறைவான மாறுதல்களால் தான் கருப்பு ,சிவப்பு ,ஆசியன் , ஆப்பிரிக்கன் என்ற இன நிற பேதங்கள் அனைத்தும் என்று கூறுகிறது அறிவியல் . இந்த அறிவுபூர்வமான புரிதலே சாதிய மூட பழக்கவழக்கங்களை வேரறுத்து விடும். ஆனால் நாம் இதை பற்றி எல்லாம் சிந்திக்க மறுக்கிறோம், பழமைக்கு பலி ஆகிறோம். 
தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா , மகாகவி பாரதியார் போன்ற பலர் சாடியும் ஐம்பது  வருட  திராவிட  ஆட்சிக்கு பின்னும் தமிழ் நாட்டில் சாதிய கொடுமைகள் நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது . வரும் தலைமுறையை இளமையில் இருந்தே சாதி மத பேதம் இன்றி வளர்க்க முற்படுவோம் . அண்ணல் அம்பேத்கரின் சட்டங்கள் தாழ்த்த பட்டவரின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும்  உறுதி செய்தது ஆனால் மன மாற்றங்கள் மட்டுமே சுதந்திர இந்தியா மேலும் சிறக்க வழி வகுக்கும்.
Dhiliban Durai, Head - Health Research, The Lantern. 

2 comments:

  1. சிறைப்பட்டு இருப்பது சிலைகள் மட்டுமல்ல,உலகில் ஆறு அறிவு கொண்ட இனம் என பெருமை பேசும் நம்முடைய உயர்ந்த சிந்தனைகளும் தான்.

    ReplyDelete
  2. Good article. Thanks to dilipan and lantern. Keep writing articles like this.

    ReplyDelete